June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

1 min read

Nobel Prize in Economics announced for 3 people

10.10.2022
2022-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

நோபல்பரிசு

நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது. இந்தநிலையில் 2022-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு. 2022-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *