June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆபாசபடம் எடு்த்து மிரட்டல்- மோசடி ராணி வலையில் 18 எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள்

1 min read

18 MLAs, Ministers in the net of scam queen

14/10/2022
அபாச படம் எடுத்து மிரட்டி பெரும் பணக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் வலையில் 18 எம்.எல்..ஏ.க்கள், மந்திரிகள் சிக்கியுள்ளனர்.

மோசடி ராணி

ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.
அவர் 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அர்ச்சனா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களைக் குறிவைத்து அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவர்களுடன் தனியாக அறையிலிருந்தபோது அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

மிரட்டல்

அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் விடிய் விடிய நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த வீடியோக்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.
இந்த குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் ஜகபந்து சந்து உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

அந்தரங்க படம்

இதில் ஆய்வு செய்த போது பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளன. 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *