அம்மா என் சாக்லேட்டை திருடி விட்டார், சிறையில் போடுங்கள்… போலீசில் புகார் அளித்த சுட்டி சிறுவன்
1 min read
Mom stole my chocolate, put me in jail… Mouse boy who reported to the police
17.10.2022
மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவன் தன் தாய் மீது போலீசில் புகார் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவன்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் 3 வயது சிறுவன் தன் தாயிடம் சாக்லேட் மற்றும் மிட்டாய் கேட்டுள்ளான். ஆனால் அவர் ஒளித்து வைத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் தன் தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார், அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளான்.
சிறுவனின் அப்பாவித்தனமான பேச்சை கேட்டு பெற்றோருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் சிறுவனின் வற்புறுத்தலால் குழந்தையை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் ஸ்டேசனில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் சிறுவன் தன் தாய் மீது புகார் கொடுத்தார். சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவன் தன் தாய் சாக்லேட் மற்றும் மிட்டாய்களைத் திருடுவதைப் பற்றி தொடர்ந்து புகார் கூற, அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.