June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழாவில் ரஜினிகாந்த் கன்டத்தில் பேச்சு

1 min read

Rajinikanth speech at Karnataka State’s 67th Udaya Day

1/11/2022-
கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழாவில் நடிகர் ரஜனிகாந்த் பேசினார். அவர் சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். அவர் கன்னடத்தில் பேசினார்.

ரஜினிகாந்த்

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா நேற்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டார். முன்னதாக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை, அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

இந்த விழாவில் கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். கர்நாடக மக்களுக்கு அந்த மாநிலத்தின் 67-வது உதய தின விழா வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து அவர் கன்னடத்தில் பேசியதாவது:-

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை. சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் தனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *