June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்ப தள்ளுபடி- ரூ.1 லட்சம் அபராதம்

1 min read

Dismissal of public interest litigation against appointment of Chief Justice TY Chandrachud- Rs.1 lakh fine

11.11..2022
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.
இதற்கிடையில் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சஞ்சீவ் குமார் திவாரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டி.ஒய்.சந்திரசூடிட நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். மேலும் இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *