எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை அருகருகே அழைத்த மோடி
1 min read
Modi invited Edappadi Palaniswami and O. Panneer Selva side by side
11.11.2022
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒரே நேரததில் அருகருகே அழைத்தார்.
மதுரையில் மோடி
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தடை பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.
அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இரண்டு பேருமே ஒன்றாக இன்று விமான நிலையத்தில் இருந்தனர்.
ஆனால் அருகருகே நிற்காமல் கொஞ்சம் தள்ளி இருந்தனர். இடையில் சில அதிகாரிகள் இருந்தனர். இரண்டு பேருமே ஒன்றாக மோடியை வரவேற்றனர். தனித்தனியாக நின்ற இருவரையும் அருகருக்கே வருமாறூ அழைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளவில்லை. இரண்டு பேரும் பேசும் சூழ்நிலைகள் ஏற்படவில்லை.