June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பெங்களூரு – சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1 min read

PM Modi inaugurated Bengaluru-Chennai Vande Bharat train service

11.11.2022
பெங்களூரு – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத்

நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 6 மணி 30 நிமிடங்களில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல முடியும்.
புதிய ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கட்டணம்

சென்னை – பெங்களூரு – மைசூரு ‘வந்தே பாரத்’ ரயில் முன்பதிவு தொடங்கியுள்ளது. சதாப்தி ரயிலை விட ரூ.200 அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பயணக் கட்டண விவரம்:

சென்னை – மைசூரு:
chair car – ரூ.1200
executive car – ரூ.2295
சென்னை – காட்பாடி
chair car – ரூ.495
executive car – ரூ.950
சென்னை – கேஎஸ்ஆர் பெங்களூரு
chair car – ரூ.995
executive car – ரூ.1885
கேஎஸ்ஆர் பெங்களூரு – மைசூரு
chair car – ரூ.515
executive car – ரூ.985

சென்னையில் இருந்து மைசூருவிற்கு ஏற்கெனவே சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல chair car வகுப்பில் ரூ.1000, executive car வகுப்பில் ரூ.1980 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் மட்டுமே சீக்கிரமாக வந்தே பாரத் ரயில் மைசூரு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *