June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் பெண்களுக்கு கேரள அமைச்சர் விளக்கம்

1 min read

Kerala Minister explains to women at Sabarimala

17.11.2022
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என கேரள அரசு கூறியதாக தகவல் வெளியான நிலையில், கேரள அமைச்சர் விளக்கம அளித்துள்ளார்.

சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) முறையாக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றனர்.

பெண்கள்

கடந்த 2018ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

வாபஸ்

இந்நிலையில், சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *