June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்

1 min read

Formation of 2 new teams in DMK

27.11.2022
திமுகவில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக 2 அணிகள்

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக கதிர் ஆனந்த் எம்.பியும், செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ டி.செங்குட்டுவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர்களாக கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *