June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

குஜராத் மாநிலத்தில் நாளை முதல் கட்ட தேர்தல்- 89 தொகுதிகளுக்கு வாக்கப்பதிவு

1 min read

Voting for 89 constituencies in the first phase of elections in Gujarat tomorrow

30.11.2022
குஜராத் மாநிலத்தில், 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குஜராத் தேர்தல்

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 1 மற்றம் 5ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் 8ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் கடந்த 29 ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. பாஜகவுக்கு வாக்கு கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தீவிர பிரசராத்தில் ஈடுபட்டனர்.

நாளை

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில், நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகள் பழங்குடியினருக்கும்; 7 தொகுதிகள் தலித்துகளுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில், 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், 70 பெண்கள் மற்றும் 339 சுயேச்சைகள்.
முதற்கட்ட தேர்தலுக்கு 25,430 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 16,416 கிராமப்புறங்களிலும், 9,014 நகர்ப்புறங்களிலும் உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *