காஷ்மீரில் மாயமான 30 பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி
1 min read
30 terrorists who went missing in Kashmir are receiving weapons training in Pakistan
26.11.2026
காஷ்மீரில் கடந்த 1991 முதல் 2003-ம் ஆண்டு வரை மாயமான 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சிக் காக தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை சேர்ந்த இளை ஞர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்து நாசவேலைகளை அரங்கேற்றி வருகின்றன.
இதற்காக உள்ளூரிலும், பாகிஸ்தானிலும் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக காஷ்மீர் இளைஞர்கள் பலர் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று வருவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 1991 முதல் 2003-ம் ஆண்டு வரை மாய மாகி இருந்தனர். இதில் 30 பேர் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெறுவதற்காக எல்லை தாண்டியிருப்பது கண்டறியப் பட்டு இருக்கிறது.
ரியாசியின் மகோர், சஸ்சனா பகுதிகளில் இருந்து மாயமான 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெறு வதற்காக எல்லை தாண்டியது தெரியவந்துள்ளதாக காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. நலின் பிரபாத் தெரிவித்து உள்ளார். இவர்கள் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ரியாசியில் இருந்து மாயமான 30 பேரும் தற்போது பாகிஸ்தானில் ஹிஸ் புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றி வருகின்றனர். பணம், ஆயுதம் மற்றும் வெடிபொருள் வினி யோகம், காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புதல், அந்த பகுதிகளில் நாச வேலைக்காக இளைஞர்களை பணியில் அமர்த்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு மாயமான பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு மகோர் போலீஸ் நிலையத்தில் உபா உள் ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பயங்கரவாதிகளில் 5 பேர் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சி எடுத்துள்ளதும், இதற்காக தங்கள் நிலத்தை விற்று பணம் திரட்டியதும் தெரியவந்துள்ளது. அவர்களின் சொத்துகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த 5 பேர் உள்பட ரியாசியில் இருந்து மாயமான 30 பயங்கரவாதிகளின் பெயரையும் காஷ்மீர் போலீசார் வெளி யிட்டு உள்ளனர்.
காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அமைதியை சீர்குலைப்பதற்காக 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் ஆயு தப்பயிற்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.