June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை பெருவழிப்பாதையில் முதன் முறையாக மின்விளக்கு வசதி

1 min read

Electricity light facility for the first time on Sabarimala Expressway

18.12.2022
சபரிமலை அய்யப்பன் கோவில் பெருவழிப்பாதையில் முதன் முறையாக மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலை பெரு வழிபாதையின் வலியானவட்டம், சிறியான வட்டம் ஆகிய இடங்களில் முதன் முறையாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சீசனில் மின்வாரியம் பம்பை சன்னிதானம் மற்றும் பம்பையில் நான்காயிரம் மின் விளக்குகள் அமைத்துள்ளது. இதில் பெரும்பாலானவை எல்.இ.டி. விளக்குகள். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் மூன்று எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதியுடன் சார்ஜிங் மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இலவுங்கல்லிலும் இதுபோன்ற வசதி செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜை நெருங்கியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைக்க போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தினமும் புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் போலீசார் பங்கேற்க வேணடும் என்றும் எஸ்.பி., ஆனந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *