June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைனில் மகளின் வீடியோவை பரப்பியதை கண்டித்த ராணுவ வீரர் படுகொலை- 7 பேர் கைது

1 min read

Army soldier condemned for spreading daughter’s video online – 7 arrested

27.12.2022
ஆன்லைனில் மகள் வீடியோவை பரப்பிய வாலிபரை கண்டிக்க சென்ற ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணுவவீரர்

குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படையின் 56-வது பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர் மெலாஜி வகேலா (வயது 45). இவரது மகளின் வீடியோவை, வாணிப்புரா கிராமத்தில் வசிக்கும் சைலேஷ் என்ற சுனில் ஜாதவ் என்ற வாலிபர் ஆன்லைனில் பரப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக வீடியோ வைரலான நிலையில், வகேலா, தனது மகன் நவ்தீப் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சைலேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், வீட்டில் சைலேஷ் இல்லை. அதற்கு பதிலாக 2 பெண்கள் உள்பட 7 பேர் சேர்ந்து ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சாவு

இதில், சம்பவ இடத்திலேயே வகேலா உயிரிழந்து உள்ளார். நவ்தீப் படுகாயமடைந்து உள்ளார். அவர் ஆமதாபாத் நகர மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இதுபற்றி வகேலாவின் மனைவி மஞ்சுளாபென் சக்லாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *