தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 13 மருத்துவ பாட புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
1 min read
M.K.Stalin publishes 13 medical textbooks translated into Tamil
27.12.2022
சென்னை புத்தக கண்காட்சியில் வருகிற 16-ந் தேதி தமிழில் மொழிபெயாக்கப்பட்ட 13 மருத்துவ பாடபுத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று சிதம்பரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ உபகரணங்கள்
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உழவர் நலல் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு பச்சிளம் குழந்தை கள் தீவிர சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, ரூபாய் ஒருகோடியே 83 லட்சம்செல்வில் மருந்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை மருத்து வமனைக்கு வழங்கினார்.
பின்னர் மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் மன்றத்தையும் அவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாடப்புத்தகங்கள்
அண்ணாமலை பல்கலைக்கழகம் என்பது வரலாற்று சிறப்புமிக்கது தமிழகத்தில் பெரும்பாலான தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் இதுவாகும்.இந்த மருத்துவக் கல்லூரி மிக சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.இங்கு போதுமான மருத்துவ கட்டமைப்புகளை இந்த அரசு படிப்படியாக செய்து தரும்.தமிழகத்தில் திருப்பத்தூர்,மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவை என மத்திய அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு ரூ.113 கோடிக்கு மேல் கட்டண சலுகை வழங்கப்பட்டடுள்ளது.150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கை பெறுகின்றனர்.
இந்த மருத்துவக் கல்லூ ரிக்கு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படைவசதிகள் அனைத்தையும் செய்து தரப்படும் கூடுதல் இயக்கு. னர் சாந்தாராம் தலைமை யில் 4 மருத்துவர்கள்,நிதி ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து இந்த மருத்து வக் கல்லூரியை தரம் உயர்த் துவதற்கான நடவடிக்மேற்கொள்ளப்படும்.
தமிழக முதல்-அமைச்ச ரின் அறிவுறுத்தலின் பேரில் 13 மருத்துவ பாட புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இதைசென்னையில் நடைபெறும் புத்தக கண் காட்சியில் 16-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். மீண்டும்
உலக அளவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.பி.எம்.7 என உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகிறது.சர்வதேச விமான நிலையங்களில் பரி சோதனைகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.