ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
1 min readHonors by Chief Minister M. K. Stalin at Anna, Karunanidhi Memorials on English New Year’s Day
1.1.2023
ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஆங்கில புத்தாண்டு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு, மெய்யநாதன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.