ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்
1 min readChange of name of Mughal Gardens at the Presidential Palace
28.1.2023
75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார்.
பெயர் மாற்றம்
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள ‘முகலாய’ தோட்டத்தை ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு சுந்திரமடைந்து 75வது ஆண்டை கொண்டாட உள்ள நிலையில் ‘அசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுதந்திர தினம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டத்திற்கு பெயரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெயர் மாற்ற உத்தரவு தொடர்பான தகவலை ஜனாதிபதிக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி அம்ரித் உதயன் என அழைக்கப்பட உள்ளது.