75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்
1 min readPM Modi released Rs 75 coin
28.1.2023
டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அவர் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
என்.சி.சி. பொதுக்கூட்டம்
டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்சிசி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை பிரதமர் பாராட்டினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பிரிக்க முயற்சி
இந்தியாவின் நேரம் வந்துவிட்டது. இன்று உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள்தான். கடந்த 8 ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் நமது பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் பேசினார்.