May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 200 பறிமுதல்

1 min read

Rs. taken without proper documents in Erode. 4 lakhs 200 confiscation

30.1.2023
உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 200ஐ கண்காணிப்புக் குழுவினர் அதிகாலை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விதிமுறைகள் அமல்படுத்துதலைக் கண்காணிக்கும் வகையில் 4 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலையான கண்காணிப்புக் குழுவினர் எல்லை மாரியம்மன் கோயில் அருகே இன்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அதில் வந்த பயணிடம் ரூ. 1 லட்சத்து 200 இருந்தது.ஆனால், அந்த அந்தப் பணத்துக்கு அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

ஜவுளி

விசாரணையில் அவர், ஆந்திர மா நிலத்தைச் சேர்ந்த ருத்ர சீனிவாசன் என்பதும், ஜவுளி கொள்முதல் செய்ய ரயில் மூலமாக ஈரோடு வந்து, ஜவுளி மார்கெட்டுக்கு ஆட்டோவில் வந்ததும் தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அந்தப் பணத்தை ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல, ஈரோடு பெருந்துறை ரோடு, வீரப்பம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெருந்துறை மார்க்கத்தில் இருந்து வந்த கார் ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், வந்தவரிடம் ரூ. 3 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது தெளபிக் என்பதும், ஜவுளி கொள்முதல் செய்வதற்காக காரில் பணத்துடன் ஈரோடு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ரூ. 3 லட்சமும் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 லட்சத்து 200ஐயும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.