May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விபத்து வழக்கில் உரிய நஷ்ட ஈடு வழங்க தாமதம்; அரசு பஸ் ஜப்தி

1 min read

Delays in providing compensation for accidents in Tenkasi; Seizure of government buses

15.2.2023
தென்காசியில் அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்த நபருக்கு நீதிமன்ற உத்தரவுபடி உரிய நஷ்ட ஈடு வழங்க தவறிய அரசு பஸ்ஸை நீதிமன்ற உத்தரவுபடி ஜப்தி செய்தனர்.

நஷ்டஈடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஊராட்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணிய நாடார் இவரது மகன் பாலசுந்தரம் (வயது 40) இவர் கடந்த 5.2.2012 அன்று திருநெல்வேலியிலிருந்து அரசு பேருந்தில் ஆலங்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே அரசுபஸ் அதிவேகமாக திரும்பி போது சாலை ஓர தடுப்பில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு ஏற்பட்டது. இதில் பாலசுந்தரம் பலத்த கொடுங்காயம் அடைந்தார். இதில் அவரது கை செயல் இழந்தது.இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுந்தரம் இந்த விபத்தில் கொடுங்காயம் அடைந்த தனக்கு போக்குவரத்துறை சார்பில் உரிய நஷ்டஈடு வழங்க கோரி தென்காசி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தென்காசி பிரபல வழக்கறிஞர் கே பி குமார் பாண்டியன் மூலம் வழக்கு தொடர்ந்தார். அதன்படி அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பாலசுந்தரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 34 லட்சத்து 95 ஆயிரத்து 138 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும். அந்தத் தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்.உத்தரவிட்டார்.

ஜப்தி

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்டபடி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு மாத காலத்திற்குள் நஷ்ட ஈடு பணத்தை கொடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக பாலசுந்தர் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன் மூலம் மேலும் ஒரு வழக்கு வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பாலசுந்தரத்திற்கு வட்டியுடன் சேர்த்து 37 லட்சத்து 16 ஆயிரத்து 923 ரூபாய் வழங்க கடந்த 12 11.2022 அன்று உத்தரவிட்டார். அதன் பிறகும் போக்குவரத்து துறை சார்பில் அவருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை.

அதனைத் தொடர்ந்து மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். மக்கள் நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து துறை மூலம் பாலசுந்தரத்திற்கு 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. மக்கள் நீதிமன்றம் உத்தரவு வழங்கி பல மாதங்கள் ஆகியும் இதுவரை போக்குவரத்து துறை சார்பில் வழங்க வேண்டிய நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை.

இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி ரஸ்கின் ராஜா உத்தரவு பிறப்பித்தார்

அதன்படி அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று நீதிமன்ற உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பாலசுந்தரம் சார்பில் தென்காசி வழக்கறிஞர் கே பி குமார் பாண்டியன் ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.