May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்

1 min read

RSS March – Tamil Nadu Government files appeal in Supreme Court

21.2.2023
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணி

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை அடுத்து 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதிவழங்கியிருந்தார்.

அடிப்படை உரிமை

எனினும் சுற்றுசுவருக்குள் நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, பொது சாலைகளில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அதுமட்டும் அல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை சரிசெய்யவேண்டியது காவல்துறையினரின் கடமை எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதிவழங்கியிருந்தது.

மேல்முறையீடு

இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில்தான், தமிழ்நாடு காவல்துறையானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்ததாகவும், அதனை கண்டுகொள்ளாமல் அரசின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் வந்துள்ளது எனவும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.