May 24, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசித் திருவிழா- நாளை தொடக்கம்

1 min read

Masith Festival at Kashi Vishwanath Swamy Temple in Tenkasi- Commences tomorrow

24.2.2023
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி கோவில்

தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா முக்கிய நிகழ்வாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா நாளை (சனிக் கிழமை) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருப்பதால் தினமும் காலை, இரவு என சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. மேலும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமி,அம்பாள் ஆகிய இருதேர்கள் வடம் பிடித்து இழுக்கப் படுகின்றன. தினமும் வெவ்வேறு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா,கோமதி கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.