June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின்
மாநிலத் தலைவராக தென்காசி மு.ரகுநாதன் நியமனம்

1 min read

of India’s Anti-Corruption Foundation Tenkasi M. Raghunathan was appointed as the state president

10.3.2023
ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக தென்காசி மு.ரகுநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் நரேந்தர் அரோரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக தென்காசி மு ரகுநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பில் முன்னாள் காவல்துறை இயக்குனர்கள், முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் பல்வேறு அரசு உயர் பதவிகள் வகித்தோர் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தென்காசி மு ரகுநாதன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பை பலப்படுத்தி வருகிறார்.
அதன் முதல்கட்டமாக தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.அதன்படிஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.எனவே ஊழலுக்கு எதிராக செயல்பட விரும்பும் அனைவரும் தமிழ்நாடு மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தென்காசி மு ரகு நாதனை தொடர்பு கொண்டு அவருடன் இணைந்து சிறப்பாக செயல்பட அன்புடன் வேண்டுகிறேன்
இவ்வாறு ஊழல் எதிர்ப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா வின் தேசிய தலைவர் நரேந்தர் அரோரா அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *