June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

1 min read

A young girl who got married for love committed suicide by setting herself on fire near Red Fort

18.3.2023
தென்காசி மாவட்டம்,செங்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன்(வயது 27). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு சென்று வரலாம் என்று மணிகண்டன் தனது மனைவி விக்னேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே வலியால் அவர் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *