June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே தேக்கு மரம் வெட்டியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

1 min read

A fine of Rs. 25,000 was imposed on the person who cut down a teak tree near the shop

26.3.2023
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை பகுதியில் வனத்துறை அனுமதியில்லாமல் பச்சைத் தேக்கு மரங்களை வெட்டிய நபருக்கு ருபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மத்தளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியில் தனியார் விளைநிலத்தில் தேக்கு மரம் வெட்டுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது மேலப் பாட்டாக்குறிச்சியைச் சேர்ந்த பால்பாண்டியன் மகன் சுப்பையா (வயது 40) என்பவர் வனத்துறை அனுமதியில்லாமல் பச்சைத் தேக்கு மரங்களை வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்ரியா உத்தரவின்பேரில் சுப்பையாவிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.