June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

3 ஆண்டுகளுக்கு பிறகு திருவாலங்காடு கோவிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது

1 min read

  •  Scanned After 3 years Panguni Uthra festival started in Tiruvalangadu templeby Gmail

26.3.2023
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா மூன்று ஆண்டுகளுக்குப்பின்
கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவாலங்காடு

சிவபெருமான் நடனம் ஆடிய ஐந்து தலங்களில் ரத்தினசபை திருவாலங்காடு. இது திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்குகிறது. இங்குள்ள சிவனுக்கு வட ஆரண்யேஸ்வரர்.
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை பார்வதி காளியாக தோன்றி அழித்த தலம் இது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சிவனின் திருநடனத்தை கண்டு முக்தி அடைந்த இடம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை, இரவு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின், 7ம் நாளான வருகிற 1-ந் தேதி கமலத்தேர் விழா நடைப்பெற உள்ளது. இதையடுத்து, 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் ஊஞ்சலும், 7ம் தேதி இரவு, 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருவீதியுலாவும் நடைப்பெறும். பின் அன்றிரவு காரைக்கால் அம்மையார் ஐக்கிய காட்சி நடைப்பெறும்.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வர் என்பதால் திருத்தணி கோவில் அதிகாரிகள் விழாவிற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து பங்குனி உத்திர விழா நடைப்பெறுவதால் உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.