June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி வைக்கம் போராட்டம்: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

Struggle to pioneer social justice struggle: Chief Minister M. K. Stalin’s speech

1.4.2023
வைக்கம் போராட்டம் குறித்த வரலாற்று தகவல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். அப்போது சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி வைக்கம் போராட்டம் என்றார்.

வைக்கம் போராட்டம்

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா இன்று வைக்கத்தில் நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வைக்கம் போராட்டம் குறித்த வரலாற்று தகவல்களை பட்டியலிட்டார். சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி வைக்கம் போராட்டம்; இந்தியாவுக்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, பெரியாரின் எழுச்சியால் தமிழகத்தில் இருந்து பல தலைவர்கள் வைக்கம் வந்து போராடினர் என்றார். ‘கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் நானும் உடலால் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்’ என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *