May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு -எஸ்‌.பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்பு

1 min read

Fast breaking program on behalf of Congress- S. Palani Nadar MLA participation

9.4.2023
தென்காசி நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பழனி நாடார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இப்தார் நோன்பு

தென்காசி நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசவு முகம்மது, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப‌.சட்டநாதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், ஆசிரியர் முகமது சலீம், ஜமாத் கமிட்டி பீர்முகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜி.மாடசாமி ஜோதிடர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே என் எல் சுப்பையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.சித்திக், செய்தி தொடர்பாளர் சந்திரன், எஸ்டிபிஐ மாவட்ட துணைத் தலைவர் செய்யது முகம்மது, நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் ஷேக் மைதீன், கிளை தலைவர் செய்யதுஅலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் முகமது அலி, தமுமுக மாவட்ட தலைவர் யாக்கூப், இந்திய தவ்ஹீத் ஜமாத் கோயா மைதீன்ஃ சாகுல் ஹமீது, கதிரவன், கோவிந்தராஜ், சபரி முருகேசன், காஜா மைதீன், கண்ணன், ஈஸ்வரன், சேகுமைதீன், உட்பட பல கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் சிறப்பாக செய்திருந்தார் முடிவில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜி. மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.