திருச்செந்தூரில் இன்று கடல் உள்வாங்கியது
1 min readToday, the sea in Tiruchendur is inundated
9.4.2023
அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம். இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தக் கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம். ஆனால் இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.