April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரி மாவட்ட புத்தக திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது

1 min read

Kanyakumari District Book Festival starts on 14th

10.4.2023
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மற்றும்
புகைப்படக்கண்காட்சி தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன
நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர்பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆட்சித்தலைவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்கவும், பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், 14.04.2023 அன்று முதல் 24.04.2023 வரை மாபெரும் புத்தகக் கண்காட்சி நாகர்கோவில் கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் 100-க்கும் அதிகமான அரங்குகள் வாயிலாக பொது அறிவு,
தொழில்நுட்பம், அறிவியல், வரலாற்று சரித்திரம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு
வைக்கப்படவுள்ளது.
இப்புத்தக கண்காட்சியினை 14.4.2023 அன்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றம் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்து,
அரங்குகளை பார்வையிடவுள்ளார்கள்.
15.4.2023 அன்று திருக்குறள் பயில்வோம் என்ற
தலைப்பிலும், 16.04.2023 அன்று வாழ்வை வளமாக்கும் வாசிப்பு என்ற தலைப்பிலும், 17.04.2023
அன்று கல்வி அதிகாரமளிக்கும் ஒரு கருவி என்ற தலைப்பிலும், 18.4.2023 அன்று வாசிப்பை
நேசிப்போம் மற்றும் குமரி – மண்ணும், மணமும் என்ற தலைப்பிலும், 19.4.2023 அன்று புத்தகம்
என்ற தலைப்பிலும், 20.4.2023 அன்று நானும் என் படைப்புகளும் மற்றும் புத்தகம் பேசுகிறது
என்ற தலைப்பிலும், 22.4.2023 அன்று புத்தகம் தரும் புத்தாக்கம் என்றத லைப்பிலும், 23.4.2023 அன்று தமிழால் தலை நிமிர்வோம் என்ற தலைப்பிலும், இலக்கிய
துறை சார்ந்த பல்வேறு ஆர்வலர்கள் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.
மேலும், 15.4.2023 (சனிக்கிழமை) அன்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஊக்கமது கைவிடேல் என்ற தலைப்பிலும், 16.4.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பட்டிமன்ற புகழ் சுகிசிவம் சிகரங்களை நோக்கி என்ற
தலைப்பிலும், 17.04.2023 (திங்கட்கிழமை) அன்று நீயா, நானா புகழ் திரு.கோபிநாத்
ஆனா, ஆவனா என்ற தலைப்பிலும், 21.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று
பட்டிமன்ற பேச்சாளர் முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் உண்டு தீர்த்தோம், உழுது
பார்த்தோம் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

22.4.2023 (சனிக்கிழமை) அன்று பத்ம ஸ்ரீ கலைமாமணி முனைவர்.நர்தகி நட்ராஜ் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சியும், 23.4.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சங்கரின் சாதக
பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
24.4.2023 (திங்கட்கிழமை) அன்று பட்டிமன்ற புகழ் கலைமாமணி பேராசிரியர் முனைவர்.கு.ஞானசம்மந்தம் குழுவினரின் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு பெரிதும் காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுவதோடு, புத்தகக் கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும்
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் நடன நிகழ்ச்சி,
பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம், களரி பைட்,தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்ட மண்ணின் கலைகள் நடைபெறவுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள்,
இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டு புத்தகத்திருவிழா மற்றும் புகைப்படக் கண்காட்சியினை சிறப்பிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்
பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ., பத்மநாபபுரம் சார் ஆட்சியர்.எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம்,
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், தனியார்

நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.