இந்தியாவில் ஒரு நாளில் 11,692 பேருக்கு கொரோனா
1 min read
11,692 people infected with Corona in one day in India
21.4.2023
நாடு முழுவதும் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 66,170 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை: 11,692. தற்போது நாடு முழுவதும் கொரோக்கா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 66,170.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை: 4,48,69,684 (4.48 கோடி)
கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை: 10,827
இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை: 4,42,72,256.
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 28. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 5,31,258.
இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.