June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை செலுத்தியது

1 min read

The PSLV-C55 rocket launched the Singapore satellites

22.4.2023
பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை செலுத்தியது

செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து, சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு முன்பு, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *