ஷேர் ஆட்டோ- அரசு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி
1 min read6 killed in head-on collision with share auto-government bus
4.5.2023
மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ- அரசு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
விபத்து
சென்னையில் இருந்து இன்று பிற்பகல் புதுச்சேரி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது. மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிதியுதவி
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ, பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.