September 14, 2024

Seithi Saral

Tamil News Channel

12 ஆண்டுக்கு பின் இந்தியா வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி

1 min read

Pakistan Foreign Minister came to India after 12 years

4.5.2023
12 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்.

பாகிஸ்தான் மந்திரி

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4, 5) கோவாவில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: மணிப்பூர் வன்முறை – போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.
12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.