June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி

1 min read

Mega Machinery and Trade Fair in Tenkasi

7/5/2023
தென்காசி மாவட்ட குழு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி இலஞ்சி ஸ்ரீ சாரதாம்பாள் கிராண்ட் மஹாலில் வைத்து நடைபெற்றது ,

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், ஷோஹோ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பவுண்டர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, வாசு தேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார்,
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கண்காட்சியில் கலந்து கொண்டனர் .

மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பிக்கப்பட்டது . அடுத்தபடியாக இவ்விழாவினை ஒளிமயமாக்கும் விதமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக தென்காசி மாவட்ட குழு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் சி .அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார் . அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஸ் பழனி நாடார் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார். இந்த விழாவின் சிறப்பினை கூற ஷோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர்வேம்பு இந்த கண்காட்சியின் சிறப்புகளை கூறினார்கள் .

அவரை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தலைமை உரையை வழங்கினார் . இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் விதமாக தென்காசி மாவட்ட குழு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் த சி .அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்

இந்த கண்காட்சியில் .தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம். மு.ஷேக் அப்துல்லா மற்றும் தென்காசி நகர் மன்ற தலைவர்
. ஆர் . சாதிர், தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே . என் . எல் . சுப்பையா மற்றும் இளைஞர் பேரூராட்சி தலைவர் சின்னதாய் தென்காசி மாவட்ட தொழில் மையம் ஜெனரல் மேனேஜர் திருமதி . பி . மாரியம்மாள், ஏடி மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனத்தின் தலைவர் ஜி.சீமியோன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.இசக்கிமுத்து,பிஎம் சிட்கோ நிறுவனத்தின் தலைவர் எஸ் . சத்யராஜ், ஆரம் டிக்நிறுவனத்தின் தலைவர் கே.முருகேசன், ஏடி திறன் மேம்பாட்டு மையம் தலைவர்
ஜி.ஜார்ஜ் பிராங்கிளின், ஆகியோர் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டார்கள் . முடிவில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைமை கூட்டமைப்பு தலைவர் டி . கே . பாண்டியன் நன்றியுரை ஆற்றி இந்த நிகழ்வினை நிறைவு செய்தார் .

தென்காசி மாவட்டத்தின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற மெகா இயந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சியின் இந்நிகழ்ச்சியினை வை அய்யப்பன் உதவி பேராசிரியர் , தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் , ஜேபி பொறியியல் கல்லூரி , திரு . செந்தில் கணேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *