June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. சார்பில் 26-ந் தேதி புளியரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min read

A.D.M.K. Condemnation demonstration at Puliyarai on 26th

23.5.2023
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள் தோறும் கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையை கண்டித்து வரும் மே.26 ல் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது

கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக் கிணங்க, அதிமுக ஜெ. பேரவை செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும்,
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த புளியரையில் மே 26 காலை 10 மணியளவில் அதிமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார்.
அதிமுக மகளிரணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி , அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் முனைவர் எஸ்.சிவஆனந்த் , மாவட்டக் கழக அவைத்தலைவர் சாம்பார் வடகரை வி.பி.மூர்த்தி, மாவட்ட கழக துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட கழக பொருளாளர் அருணாப்பேரி சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் , அதிமுக மாநில பேச்சாளர் தீக்கனல் லெட்சுமணன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் ஆய்க்குடி கே செல்லப்பன், வேல்முருகன், வாசுதேவன், ஜெயகுமார், வசந்தம் முத்துபாண்டியன், செல்வராஜ், நகர செயலாளர்கள் எம் கே முருகன் ஆறுமுகம் அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவருமான டாக்டர் சுசீகரன் செங்கோட்டை ஞானராஜ், ஆய்க்குடி பேரூர் கழக செயலாளர் முத்துகுட்டி மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், முருகன், அங்கப்பன்,தனபால், புகழேந்தி, அந்தோணி, சங்கை கணபதி, அக்ரஹாரம் பகுதி செயலாளர் பரமசிவம், வார்டு கழக வட்ட செயலாளர் காவேரி செல்வன், 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹேமலதா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜாராம், டாக்டர் திலீபன், ஜெய்சங்கர், சுசீந்திரன், லெட்சுமணன், மற்றும் , பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி வடக்கு
மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *