கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi to visit Kyrgyzstan and Uzbekistan.
4.8.2026
உலகில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்துள்ள மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புது டெல்லி: உலகில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்துள்ள மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கிர்கிஸ்தானில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இந்த மாநாட்டின் இடையே இந்தியா கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
சமீபத்தில் டெல்லி வந்துள்ள உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பக்தியோர் சைதோவ் , பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பிறகு அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பயணத்தின் இரு தரப்பு உறவு வலுப்படுவதுடன், கடந்த காலங்களில் ஒத்துழைப்பானது, வரும் காலங்களில் இன்னும் வலுவடையும் என்றார்.