ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கியமின்வாரிய உதவி பொறியாளர் கைது
1 min readElectrical assistant engineer arrested for taking bribe of Rs.2 thousand
25.5.2023
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கிய
மின்வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
வீடு கட்ட…..
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் ஆலந்தாங்கல் கிராமத்தில் குரூப் ஹவுஸ் வீட்டில் வசித்துவருபவர் பாஸ்கரன் மகன் சக்திவேல் இவரது தகப்பனார் ஆடுமேய்க்கும் தொழிலும் செய்துவருகிறார் ஒரே தங்கைக்கு திருமணம் நடத்தி முடித்துள்ளார்
இவர் சுங்கவாசத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். தனது கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி மனைபிரிவில் மனை ஒன்று இவருக்கு சொந்தமாக உள்ளது.
இதில் இவர் வீடு கட்டி துவங்கியிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மின்கம்பி
வீடு கட்டும் பணி தடைபடாமல் தொடர வேண்டுமென்பதற்காக வீட்டிற்கு மேல்பகுதியில் மின்சார கம்பி பாதை செல்வதால் இது தொடர்பாக வெம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளர் அஜீத்பிரசாத் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதற்காக இணைப்புகள் பெற சக்திவேல் மனுவாகவும் கொடுத்துள்ளார்.
லஞ்சம்
அப்போது உதவி பொறியாளர் அஜீத்பிரசாத் திட்ட மதிப்பீடு ரூ.50ஆயிரம் கொண்டுவா எனசொல்லி அனுப்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் ரூ.50ஆயிரம் கொடுத்துள்ளார் ஆனால் பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீது கொடுக்காமல் பலமுறை அலைக்கழித்துள்ளார்.
இதுசம்பந்தமாக சக்திவேல் கடந்த மே 17ந்தேதி சென்று மின்வாரிய அலுவலகத்தில் சென்று பார்த்தபோது திட்ட மதிப்பீடு ரூ.37 ஆயிரம் கொடுத்தால்போதும் என கூறியுள்ளார். அப்போது அவர் மொத்த பணமும் உங்களிடம்தானே உள்ளது என கூற உடனே அருகில் உள்ள ஏடிஎம் சென்று உதவி பொறியாளர் ரூ.39ஆயிரம் பணத்தை எடுத்து சக்திவேலிடம் கொடுத்து எஸ்இ டிஏஎன்ஜிஇடிசிஒ என்ற பெயரில் டிடி எடுத்து கூறினார் இதனைத் தொடர்ந்து கடந்த 18ந் தேதி டிடியும் கொடுத்துள்ளார்
பின்னர் உதவிபொறியாளர் 2 நாட்களில் வேலைமுடித்துகொடுப்பதாகவும் அனுப்பியுள்ளார் இந்நிலையில் கடந்த 24ந் தேதி காலை உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் 10 பேருடன் வீட்டு மனை இடத்திற்குவந்து 2 கம்பங்களை இறக்கிவைத்துவிட்டு மீண்டும் ரூ.2ஆயிரம் கேட்டுள்ளனர். அதற்கு சக்திவேல் ஏற்கனவே நான் கொடுத்த ரூ.50ஆயிரத்தில் ரூ.39 ஆயிரம் மட்டும் என்னிடம் கொடுத்துள்ளீர்கள் மீதும் ரூ.11ஆயிரம் உள்ளது என கூற உதவிபொறியாளர் எனக்கும் உதவி செயற்பொறியாளருக்கும் வேண்டும் எனவே மேலும் ரூ.2ஆயிரம் கொடுத்தால்தான் மற்ற வேகைளை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்
கடந்த 5 மாதங்களாக இந்த வேலைக்கு அலைந்து மீண்டும் பணம் கேட்டு தொல்லைகொடுத்துவந்த வெம்பாக்கம் மின்வாரிய உதவிபொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு பிரிவு (விஜிலென்ஸ்) டிஎஸ்பி வேல்முருகனிடம் சக்திவேல் நேற்று காலை புகார் செய்தார்.
அதன்பேரில் ரசாயணம் தடவிய ரூ நோட்டுகளுடன் வெம்பாக்கம் மின்வாரிய உதவிபொறியாளர் அலுவலகம் சென்று பணத்தை கொடுக்கும்போது டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான விஜிலென்ஸ் பிரிவினர் உதவிபொறியாளர் அஜீத்பிரசாத்தை கையும்களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தலைமையகம் மற்றும் மல்லவாடி அலுவலகத்தில் 2 ஊழியர்களை சமீபத்தில்தான் விஜிலென்ஸ் டிஎஸ்பி கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கைது நடவடிக்கை மின்வாரியத்தில் தொடர்ந்து நடப்பதால் ஊழியர்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவது குறித்து பதட்டமும் ஏற்பட்டுள்ளதோடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.