குற்றாலம் அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர் குண்டர் சட்டத்தில் கைது
1 min readHusband who threw country bomb at wife near Courtalam arrested in gangster act
25.5.2023
குற்றாலம் அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
நாட்டு வெடிகுண்டு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 33). இவர் தனது மனைவி கவுசல்யாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்.
இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனகுமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பரிந்துரையின் பேரில், சந்தனகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதற்கான ஆணையை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தார்.