சங்கரன்கோவில் அருகே விபத்தில் 5 பேர் பலி
1 min read5 people died in an accident near Sankarankoil
25.5.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பனவடலிசத்திரம் பகுதியில் ஒரு காரும் தனியார் பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
5 பேர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பள்ளி வாகனம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை குருசாமி (45) குருசாமியின் மனைவி வேலுத்தாய் (35) மாமியார் உடையம்மாள் (60) குருசாமி மகன் மனோஜ் குமார் (22) உள்ளிட்ட காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சங்கரன்கோவில் நோக்கி திரும்பி கொண்டுவந்தனர். காரை மேல ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஒட்டி வந்தார்.
சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் இயங்கும் தனியார் பள்ளி வேன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது
அப்போது காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
5 பேர் பலி
இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி, வேலுத்தாய், உடையம்மாள், மனோஜ் குமார், ஓட்டுநர் அய்யனார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தனியார் பள்ளி மாணவிகள் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் பனவடலிசத்திரம் போலீசார் ஐந்து பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தகவல் அறிந்து தென்காசி ஆட்சியர் துரைரவிச்சந்திரன், கோட்டாட்சி தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா உள்ளிட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காவல்துறையினிடம் விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.