October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தொகுதியில் புதிய சாலைகள் – மேம்பாலம் அமைக்க அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை

1 min read

Request to minister AV Velu to construct new roads – flyover in Tenkasi constituency

25.5.2023
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மற்றும் சுரண்டை நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை, அமைக்க வேண்டும். இலஞ்சி- குத்துக்கல்வலசை சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனுவாக கொடுத்துள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

சுற்றுச்சாலை

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மற்றும் சுரண்டை நகராட்சியை சுற்றி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆலங்குளம், சுரண்டை பாவூர்சத்திரம் ஆகிய ஊர்களில் உள்ள காய்கறி சந்தையில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது மேலும் கேரள மாநிலத்திற்கும் காய்கறி மற்றும் விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
தென்காசி சுரண்டை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் கல்லூரிக்காக தினமும் முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர் இதனால் சுரண்டை தென்காசி நகரப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அந்த பகுதிகளை கடந்து செல்ல மிகவும் தாமதம் ஏற்படுகிறது.
சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி தென்காசி நகராட்சி மற்றும் சுரண்டை நகராட்சி பகுதிகளை சுற்றி விரைவாக சுற்றுச்சாலை அமைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.

வேகத்தடை

மேலும் குத்துகல்வலசை முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் தென்காசி தொகுதிக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது அகற்றப்பட்ட 29 வேகத்தடை களையும் மீண்டும் அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேம்பாலம்

குத்துக்கல்வலசை – இலஞ்சி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார்.
அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் உடன் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.