October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க பாஜக கோரிக்கை

1 min read

BJP demands to prevent conversion of land for sale into residential plots

25.5.2023
“தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி பாரதிய ஜனதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன் அருள்செல்வன் ராமநாதன் பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி பாலா கலந்துகொண்டு வழிகாட்டினார்
மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ் பாண்டித்துரைமுன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்

இந்த கூட்டத்தில் பாஜக மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன்
மாவட்டத் துணைத் தலைவர்கள்
வழக்கறிஞர் முத்துலட்சுமி, பாலா, ஸ்ரீனிவாசன், முத்துக்குமார், பால்ராஜ், பாலமுருகன், ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அர்ஜுனன்
மற்றும் ஒன்றிய அணி பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்

தீர்மானங்கள்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டி கிராம பஞ்சாயத்தில் கலிங்கப்பட்டி மகாதேவர் பட்டி முத்து ரெட்டிபட்டி வேத முத்து நகர் ராம ராஜாபுரம் மரத்தோணி வீராணபுரம் ஆமாரம்பட்டி பிள்ளையார் குளம் இந்த 11 கிராமங்களுக்கும் இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்களும் கலிங்கப்பட்டியில் உள்ளது இதில் ஒரு அலுவலகத்தை கலிங்கப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட வேறு குக்கிராமத்தில் மாற்றி வைக்க வேண்டும்.

வீட்டுமனை

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் பல கிராமப்புற பகுதிகளுக்கு பகல் நேரங்களில் சில பேருந்துகளும் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது தமிழக அரசு உடனே அனைத்துஷகிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சட்டவிரோதமாக கல் மற்றும் மணல் குவாரிகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை அண்டைமாநிலமான கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலமாக கடத்துகிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்

இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தென்காசி மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை மாவட்ட செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது

ஊத்துமலை

ஊத்துமலையில் அதிக மக்கள் தொகை உள்ளதால் கிராம ஊராட்சியை பேரூராட்சியாக உயர்த்த வேண்டும். ஆலங்குளம் யூனியனில் சுமார் 33 கிராம பஞ்சாயத்து உள்ளதால் வளர்ச்சி திட்டங்கள் அனைவருக்கும் சரியாக போய் சேராமல் இருந்து வருகிறது எனவே ஊத்துமலையை தலைமை இடமாக கொண்டு ஆலங்குளம் யூனியனை இரண்டாக பிரித்து தனி யூனியன் அமைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

-முத்துசாமி, நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.