தென்காசி நூலகத்தில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி
1 min readDistrict Level Painting Competition at Tenkasi Library
26.5.2023
தென்காசி மாவட்ட அளவிலான மெகா ஓவியப்போட்டி தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து 110 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு கேடயமும் , கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு வாசிப்பு பயிற்சியினை இளம்வயதிலேயே பெறுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது
கதீட்ரல் விழாவில் தென்காசி வட்டார நூலகர் சூ.பிரம நாயகம், தென்காசி கிளைநூலகர் ஜெ.சுந்தர், தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் ,இளமுருகன் நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி , நிஹ்மதுனிஸா ஓவிய ஆசிரியர் ஜெயசிங் வாசகர் வட்ட நிர்வாகிகள் , இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் , நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி கிளை நூலகர் ஜெ.சுந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.