தென்காசியில் போதை மாத்திரை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்- ஒருவர் கைது
1 min read4 boys fainted after taking drug pills in Tenkasi – one arrested
28.5.2023
தென்காசியில் போதை மாத்திரை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி போதை மாத்திரை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
4 சிறுவர்கள்
தென்காசி வாலிபன்பொத்தை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 சிறுவர்கள் போதை மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல் நிலை சரியில்லாமல் தென்காசி அரசு மருத்துவ னையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் கே. எஸ்.பாலமுருகன் தலைமையில் காவலர்கள் செந்தூர் வேலன், கார்த்திக் தனி பிரிவு காவலர் ஆனந்தராஜ் அவர்களுடன் விரைந்து செயல்பட்டு சிறுவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்த எல்ஆர்.எஸ்.பாளையம்,
பகுதியை சேர்ந்த எதிரி வேலுமணி என்பவரது மகன் காசிராஜன் (வயது 40) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர் அதன்பின் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் நீதிபதி அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
போதை மருந்து சாப்பிட்டு உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் நான்கு பேரும் நலமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.