தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம்.
1 min read
Free medical camp organized by Social Harmony Federation in Tenkasi.
28.5.2023
தென்காசி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அரிப்புக்கார தெருவில் உள்ள, ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் வைத்து,இலவச எலும்பு முறிவு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை, நாகர்கோவில் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை மற்றும்
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், இலவச எலும்பு முறிவு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமை தாங்கினார் தென்காசி ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தாளாளர் சம்சுதீன் உலவி முன்னிலை வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.சித்திக் முகாமை துவக்கி வைத்தார்.
தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகமது அலி அனைரையும் வரவேற்று.பேசினார்
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவ மனையை சார்ந்த மருத்துவ குழுவினரும், நாகர்கோவில் திரவியம் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவ குழுவினரும் சேர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பெஜான்ஸிங் முகாம் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் துணைச்செயலாளர் அசாருதீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.