May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மனநலம் பாதித்த நபரை மீட்ட பசியில்லா தமிழகம்-பொதுமக்கள் பாராட்டு

1 min read

No-Hunger Tamil Nadu – public praise for rescuing a mentally challenged person in Tenkasi

28.5.2023
தென்காசியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநோயாளியை பசியில்லா தமிழகம் அமைப்பினர்
மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மனநலம் பாதிப்பு

தென்காசி மாவட்டம் தென்காசி ரயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாலையோரம் ஆதரவின்றி துர்நாற்றத்துடன் அங்கும் இங்கும் நடக்க முடியாமல் சுற்றி தெரிவதாக பொதுமக்கள் மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது.

உடனடியாக களத்திற்கு சென்ற பசியில்லா தமிழகம் குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டெடுத்து தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியும் பெற்று, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் சென்று மனநல மருத்துவரிடம் கலந்து அவருக்கு முதலுதவி செய்து, ஆர்.சோயா நிறுவனர் சரவணன் அவர்களின் அனுமதியின் பேரின் திருநெல்வேலி மாவட்ட அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பிரிவில் அனுமதித்துள்ளனர்.

பல நாட்கள் குளிக்காமலும், மலம் இருந்து கழுவாமலும் அதிக துர்நாற்றத்துடனும் இருந்த நபரை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து முதலுதவி செய்து தொடர்ந்து பராமரித்து, அவரது இல்லம் கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்க்கும் பணியை செய்து கொண்டு வருகிறது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை

பல நாட்கள் பராமரிப்பு இல்லாததாலும், யாருடனும் பேசாமல் இருந்ததாலும், ஊர் பெயர் மறந்து இறுதியில் மொழியையும் மறந்து அனாதையாக சுற்றித் திரிந்த நபர் இறைவன் அருளால் இன்று பாதுகாப்பாக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

தமிழகத்திற்கு அனாதைகளாக யார் வேண்டுமானாலும் வரலாம்,
ஆனால் தமிழகத்திற்கு வந்த பிறகு யாரும் அனாதைகள் கிடையாது,

நாங்கள் இருக்கிறோம்
இன்னும் இதுபோன்ற தமிழகத்தில் அனாதைகளாக சாலையில் சுற்றித்திரியும் பல நபர்களை மீட்டெடுக்க தயாராக உள்ளோம். உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.என்று
பசியில்லா தமிழகம் (8883340888) அமைப்பின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.