அசாமில் தடுப்புச் சுவரில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி
1 min read7 college students killed as car crashes into barricade in Assam
29.5.2023
அசாமில் அதிவேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலியானார்கள்.
விபத்து
அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ளது அசாம் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பத்து பேர், ஏழு பேர் அமரக்கூடிய கார் ஒன்றை எடுத்துக் கொண்டு இன்று காலை கல்லூரியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குவாஹாட்டியின் நெடுஞ்சாலை பகுதியில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த அவர்களது கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளது. பின்னர் சாலையின் மறுபக்கம் பாய்ந்து எதிரே வந்துகொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றின் மீது மோதியுள்ளது.
7 பேர் பலி
இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த ஏழு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த மற்ற மூன்று மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்துக்கு வந்த குவாஹாட்டி போலீஸார் உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்,