கீழப்பாவூரில் இருதய பரிசோதனை முகாம்
1 min readCardiac check-up camp at Kilapavur
29.5.2023
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் பகுதியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பரிசோதனை முகாம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசி தெற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் முதல் நிகழ்ச்சியாக, கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாகம், நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் கீழப்பாவூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மருத்துவர்கள் அருணாசலம், சுவர்ணலதா மற்றும் குழுவினர் பரிசோதனை கொண்டனர். முகாமில் திமுக முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் மாடசாமி, மாரியப்பன், குத்தாலிங்கம், மதியழகன், தங்கப்பழம், பாலசுப்பிரமணியன், மாரிச்செல்வன், தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் விஜிராஜன், இசக்கிமுத்து, ஜெயசித்ரா குத்தாலிங்கம், முத்துசெல்வி ஜெகதீசன், இசக்கிராஜ், கோடீஸ்வரன், கனகபொன்சேகா முருகன், அன்பழகு சின்னராஜா மற்றும் மனோகரன், சங்கரன், அறிவழகன், பூங்குன்றன், ராமகிருஷ்ணன், தாமோதரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.