விவசாயத்துக்கான மின்சாரம் 12 மணி நேரமாக குறைப்பு
1 min read
Electricity for agriculture reduced to 12 hours
29.5.2023
தமிழகம் முழுவதும் விவசாயத் துக்கான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது. மேலும் மின்சாரத்தை ஒரே நாளில் 2 தவணையாக வழங்கு வதால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மும்முனை மின்சாரம்
விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்பு 18 மணி நேரமாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் மார்ச் மாதத்திலிருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப்-1, குரூப்-2 என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, டெல்டா மாவட் டங்களில் பகலில் 2 பகுதிகளுக்கும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவில் குரூப்-1 பகுதிக்கு அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதிலும் சில சமயங்களில் முறையாக மின்சாரம் விநி யோகிப்பதில்லை. ஒரே நாளில் 12 மணி நேர மின்சாரத்தை 2 தவணைகளாக விநியோகிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:
ஏற்கெனவே மும்முனை மின்சாரம் வழங்குவதை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைத்துவிட்டனர். அதையும் 2 தவணைகளாக வழங்குவதால் பம்புசெட் மோட்டார் இயக்குவதற்கு இரவு, பகலாக தோட்டத்துக்கு அலைய வேண்டியுள்ளது.
இதனால் பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் செல்வதிலும் சிரமம் உள்ளது. 12 மணி நேர மின்சாரத்தை ஒரே தவணையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.