புதிய வகுப்பறை கட்டிடத்தை பழனிநாடார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
1 min read
Palaninadar MLA inaugurated the new classroom building
8.6.2023
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டலூரில் ரூ..18.70 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதிய வகுப்பறை
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டலூர் அரசு தொடக்கப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை தலைமையில். துணை சேர்மன் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், மதிமுக மாவட்ட செயலாளருமான இராம.உதயசூரியன் அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் மேரிமாதவன், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் குமார்பாண்டியன், காயாம்புசாமி, தங்கப்பழம், கொண்டலூர் பால்நாடார் தமிழ்பாண்டி,,அன்பு,இராஜேந்திரன், மாரிச்செல்வம், மணிகண்டன், வெற்றி மற்றும் ஆசிரியர்கள் மீனாட்சி, வெனிஸ்தா, பொன்சுதா,.சகுந்தலா,சத்துணவு ஆசிரியை சீலா. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.