June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் கொலை வழக்கு மேலும் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

1 min read

Two more arrested in Alankulam murder case

15.6.2023
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மணிகண்டன் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அப்பு என்ற அப்புரானந்தம் (வயது 42) மற்றும் இசக்கிபாண்டி (21) ஆகிய இருவரும் கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சண்முகநாதன் என்ற நெட்டூர் ராஜா (28), மாரிசெல்வம் என்ற மாரி (23) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பரிந்துரைத்தார்.
இதனை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *